ஆக்ஷன் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் மோகன்
ADDED : 1295 days ago
80-களில் தமிழ் சினிமாவின் காதல் மன்னனாக அனைவரையும் கவர்ந்த நடிகர் மைக் மோகன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் கதாநாயகனாக ஹரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஸ்ரீ இயக்கும் இப்படத்தில் நடிகை குஷ்பு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதுவரை காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த மோகன் தற்போது முழு ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ கூறுகையில் “மோகன் ஆக்ஷன் படங்களை தவிர்த்து பல காதல் படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் அவர் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அதற்காக மோகன் கடினமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். அவர் இந்தப் படத்தில் அப்பாவாக நடிக்கிறார். அவருக்கும், அவரது மகளுக்கும் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது என்று தெரிவித்துள்ளார்.