ஹன்சிகாவின் 50வது படம் ஏப்ரல் 28ல் ரிலீஸ்
ADDED : 1294 days ago
ஹன்சிகா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் மஹா. இது அவரது 50வது படமாகும். இந்த படத்தில் சிம்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனது. படம் வெளியாகாமல் இருப்பது பற்றி நடிகை ஹன்சிகா கூட சமீபத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 28 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.