'குளு குளு' படத்திற்கு டப்பிங் செய்துவரும் சந்தானம்
ADDED : 1656 days ago
நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குனர் ரத்ன குமார் இயக்கியுள்ள படம் 'குளு குளு'. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன், சேசு ஆகியோயர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சந்தானம் 'குளு குளு' படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். சந்தானம் டப்பிங் பேசும் புகைப்படத்தை படத்தின் இயக்குனர் ரத்ன குமார் பகிர்ந்துள்ளார்.