நாகசைதன்யாவை இயக்க தயாராகும் வெங்கட் பிரபு
ADDED : 1290 days ago
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படம் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது வெங்கட்பிரபு அசோக் செல்வன் இயக்கத்தில் 'மன்மதலீலை' படத்தை விரைவாக எடுத்து முடித்துள்ளார். அடல்ட் காமெடி கலந்த படமாக உருவாகி இந்த படம் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை இயக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நாகசைதன்யாவிடம் கதையையும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. விரைவில் படம் தொடர்பான வேலைகளை துவங்க உள்ளார் வெங்கட்பிரபு.