கிருத்திகா உதயநிதியின் பேப்பர் ராக்கெட்
ADDED : 1281 days ago
உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் 'வணக்கம் சென்னை'. இந்த படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் 'காளி' எனும் படத்தை இயக்கினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், கருணாகரன், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்திற்கு ‛பேப்பர் ராக்கெட்' என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன் உடன் படத்தின் முதல் பாடலாக ‛காலை மாலை' என்ற பாடலையும் வெளியிட்டுள்ளனர்.