'பி.ஈ. பார்' படத்தின் முதல் பார்வை வெளியீடு
ADDED : 1381 days ago
'காவல்துறை உங்கள் நண்பன்' படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படக்குழுவினர் 'பி.ஈ. பார்' (B.E. BAR) என்ற தலைப்பில் அடுத்த படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இயக்குநர் ஆர்டிஎம் இப்படத்தை இயக்குகிறார். நட்பினை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்த சுரேஷ் கோபி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சதுரங்க வேட்டை புகழ் இஷாரா நாயர் நடிக்கிறார். தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாஸ்கரன், ராஜபாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார் .