ரூ.1000 கோடி கிளப்பில் 'ஆர்ஆர்ஆர்' - 2வது முறையாக ராஜமவுலி செய்த சாதனை
ADDED : 1279 days ago
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பில் மார்ச் 25ல் திரைக்கு வந்த படம் ‛ஆர்ஆர்ஆர்'. உலகம் முழுக்க வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடி வசூலைக் கடந்தது. மூன்றே நாட்களில் 500 கோடி வசூலை உலக அளவில் கடந்து சாதனை படைத்தது. இப்போது அடுத்த சாதனையாக ரூ.1000 கோடி வசூலை எட்டி உள்ளது. இதை படக்குழுவினர் மும்பையில் விழா எடுத்து கொண்டாடி உள்ளனர். இதில் ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்மூலம் இரண்டாவது முறையாக ராஜமவுலியின் படம் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதற்கு முன் பாகுபலி 2 படம் உலகளவில் ரூ.1800 கோடி வசூலித்தது. பாகுபலி 2 வசூலை ‛ஆர்ஆர்ஆர்' படம் முறியடிக்குமா என பொருத்திருந்து பார்ப்போம்.