ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக இணைந்த சிம்பு
ADDED : 1279 days ago
நடிகர் சிம்பு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'ஆஹா' ஓடிடி தளம் தெலுங்கில் மிகவும் பிரபலமாக உள்ள ஓடிடி தளம் . தற்போது தமிழிலும் இவர்கள் கால்பதித்துள்ளனர்.
தமிழில் பல இணைய தொடர்கள் மற்றும் படங்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் சிம்பு ஆஹா ஓடிடி தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.