உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்த நாளிலேயே இறந்த பழம்பெரும் தெலுங்கு நடிகர்

பிறந்த நாளிலேயே இறந்த பழம்பெரும் தெலுங்கு நடிகர்

தெலுங்கு திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகரான பாலையா,96, வயது முதிர்வு காரணமாக அவரது பிறந்த நாளான நேற்று காலமானார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1926ம் ஆண்டு ஏப்ரல் 9ல் பிறந்த, மன்னவ பாலையா தெலுங்கில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், 10 திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஆந்திர அரசின் 'நந்தி' விருது பெற்றவர். வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர், தனது பிறந்த நாளான நேற்று காலமானார். பாலையா மறைவுக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !