ரோல்ஸ் ராய்ஸ் காரில் பீஸ்ட் படக்குழு உடன் ரவுண்ட் அடித்த விஜய்
ADDED : 1321 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்காக படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் இறங்கி உள்ளனர். விஜய்யை இயக்குனர் நெல்சன் பேட்டி எடுக்கும் வீடியோக்களும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், இயக்குனர் நெல்சன், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் ஆகியோர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரவுண்டு செல்ல ஆசைப்பட்டுள்ளார்கள்.
அதையடுத்து அவர்களை தனது காரில் அமர வைத்து தானே காரை ஓட்டிச் சென்றுள்ளார் விஜய். இப்படி விஜய் கார் ஓட்டும் அந்த காட்சியை நடிகரும், நடன மாஸ்டருமான சதீஷ் வீடியோவாக எடுத்துள்ளார். பீஸ்ட் படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கூடவே அந்த வீடியோவில் இளையராஜாவின் பாடல்களும், அரபிக்குத்து பாடலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.