கருப்பு நிற புடவையில் அசத்தும் ஸ்ருதிஹாசன்
ADDED : 1321 days ago
தெலுங்கில் பிரபாஸ் உடன் சலார் மற்றும் பாலகிருஷ்ணா நடிப்பில் கோபிசந்த் மாலினேனி இருக்கும் புதிய படத்திலும் நாயகியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். சமீபகாலமாக தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ருதிஹாசன், தற்போது கருப்பு நிற புடவையில் நியூ லுக்கில் தான் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் வைரலாகின. முன்னதாக அசாம் மாநிலம் கவுகாத்திக்கு காதலர் உடன் சென்ற ஸ்ருதிஹாசன், அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.