உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீபாவளிக்கு திரைக்கு வரும் விஜய் 66

தீபாவளிக்கு திரைக்கு வரும் விஜய் 66

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க ,சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. அதனால் விஜய் 66வது படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு இங்குதான் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் வம்சி. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர வேண்டுமென்று திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !