ஐஸ்வர்யா ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?
ADDED : 1275 days ago
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பிறகு ஐஸ்வர்யா அன்கித் திவாரி இசையமைப்பில் முஸாபிர் என்கிற பாடல் வீடியோவை சமீபத்தில் இயக்கி வெளியிட்டார் . மேலும் ஹிந்தியில் புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகிவுள்ளார். இவர் இயக்கும் முதல் ஹிந்தி படமான இப்படத்திற்கு 'ஓ சாதிசால்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பல பதிவுகளை ஷேர் செய்து வருவது வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து உள்ளார். மேலும் அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பு தனது அடுத்த படங்களில் இளையராஜா இசையமைப்பது பற்றி இருக்கும் என கூறப்படுகிறது. ஐஸ்வர்யா இயக்கும் ஹிந்தி படத்திற்காகவா அல்லது ராகவா லாரன்ஸின் படத்திற்காகவா என விரைவில் அதிகாரபூர்வ தகவலை எதிர்பார்க்கலாம் .