சசிகுமாருடன் நடிக்கும் ரம்யா நம்பீசன்
ADDED : 1275 days ago
சசிகுமார் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது தங்கம் பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் 'அஞ்சல' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரண்டு பேர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகை அனன்யா நாகல்லா கதாநாயகியாக நடித்து வருகிறார். மற்றொரு கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கருணாஸ், விக்னேஷ், பிரபாகர் ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் ஆந்திராவில் உள்ள மலைப் பகுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது .