அருண் விஜய்யின் யானை ரிலீஸ் தள்ளிவைப்பு
ADDED : 1271 days ago
ஹரி இயக்கத்தில் முதன்முறையாக அவரது மைத்துனர் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள படம் யானை. பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு உள்பட பலர் நடித்திருக்கும் யானை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. மே 6-ந்தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளனர். அதனால் தற்போது ஜூன் 17ல் யானை படம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.