ஸ்கூபா டைவிங்கில் அசத்திய ராய் லட்சுமி
ADDED : 1311 days ago
தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார் லட்சுமி ராய் எனும் ராய் லட்சுமி. மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற இவர், அங்கிருந்தபடி நீச்சல் உடை அணிந்த கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார். அதோடு அங்கு கடலுக்கு அடியில் செல்லும் ஸ்கூபா டைவிங்கும் செய்துள்ளார். அது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள அவர், கூடவே ‛‛வேறொரு புதிய உலகத்திற்குள்... இங்கு சுதந்திரமான வாழ்க்கை'' என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.