ஆண் குழந்தைக்கு அம்மாவானார் நடிகை காஜல் அகர்வால்
ADDED : 1309 days ago
நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்து வந்தார். பின்பு கர்ப்பமானதால் தான் நடித்து வந்த படங்களில் இருந்து விலகினார். கர்ப்பகாலம் அனுபவம் பற்றியும், அந்த காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி பற்றியும் தொடர்ச்சியாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார். மேலும் தனது கணவர் கர்ப்பகாலத்தில் தன்னை கவனித்து கொண்ட விதம் பற்றியும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் காஜல் அகர்வால் - கிச்லு தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை இன்று(ஏப்., 19) பிறந்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.