மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
1259 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
1259 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
1259 days ago
'பாகுபலி' படங்களின் மூலம் பான்-இந்தியா நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ' படம் ஹிந்தியில் மட்டுமே வெற்றி பெற்று மற்ற மொழிகளில் தோல்வியடைந்தது. அதற்கடுத்து பிரபாஸ் நடித்த 'ராதேஷ்யாம்' படம் கடந்த மாதம் வெளிவந்தது. அப்படம் ஹிந்தியில் கூட ஓடாமல் அனைத்து மொழிகளிலும் தோல்வியடைந்தது. மொத்தமாக 150 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்கிறார்கள்.
இந்நிலையில் படத்திற்கான தோல்வி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் பிரபாஸ். “என்னை ரசிகர்கள் ஒரு ரொமான்டிக் ஹீரோவாகப் பார்க்க விரும்பவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் படத்தில் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்திருக்கிறார்கள். கோவிட் காரணத்தாலோ அல்லது ஸ்கிரிப்ட்டில் நாங்கள் எதையோ மிஸ் செய்திருக்கிறோம். என்னை அந்த மாதிரியான படத்தில் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை என்பது புரிகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
'ராதே ஷ்யாம்' தோல்வியடைந்தாலும் பிரபாஸ் தற்போது 'ஆதி புருஷ், சலார், பிராஜக்ட் கே' உள்ளிட்ட பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார்.
1259 days ago
1259 days ago
1259 days ago