நடிகராக அறிமுகமாகிறாரா சூர்யாவின் மகன்?
ADDED : 1262 days ago
'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்', 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா தனது அடுத்த படமான 'சூர்யா 41' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது .
'கோமாளி' புகழ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுடன் சூர்யாவின் மகன் தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவுக்கும், அவருடன் அருகில் இருக்கும் மற்றொரு சிறுவனுக்கும் ஒரு காட்சியை பிரதீப் ரங்கநாதன் விளக்குவது போல அப்புகைப்படம் உள்ளது. எனவே பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் தேவ் நடிகராக அறிமுகமாகிறார் என தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை .