உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விக்ரம் படத்தின் கதை இதுதானா? வழக்கம் போல் கசிந்த தகவல்

விக்ரம் படத்தின் கதை இதுதானா? வழக்கம் போல் கசிந்த தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இன்றய சூழலில் பல படங்களின் கதைகள் வெளியே கசிவது வழக்கம் ஆகிவிட்டது. கதைப்படி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜெயிலில் இருக்கிறார். அவரை வெளியில் கொண்டு வரும் அசைன்மென்ட் பஹத் பாசிலுக்கு கொடுக்கப்படுகிறது. அதனால் அவரும் ஏதோ ஒரு குற்றத்தை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார்.

இவர்களின் இந்த தில்லாலங்கடி வேலைகளை தெரிந்து கொண்ட கமல் அவர்களின் இந்த முயற்சியை முறியடிப்பதற்காக அதே ஜெயிலுக்கு செல்கிறார். இப்படியே முக்கால்வாசி கதை ஜெயிலில் தான் நகரும் படி எடுக்கப்பட்டு இருக்கிறது என தகவல் கசிந்துள்ளது .

சில வருடங்களுக்கு முன்பு விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது. அதன் பிறகு கமல் அரசியல், பிக் பாஸ் என்று பயங்கர பிஸியாக இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளையும் மெனக்கெட்டு ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் எடுத்துள்ளாராம் லோகேஷ் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !