ஷெரினின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
ADDED : 1262 days ago
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிறிது காலம் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஷெரின். அதன்பின் சரிவர பட வாய்ப்புகள் அமையாததாலும், உடல் எடை கூடிய பிரச்னையின் காரணமாகவும் அவுட் ஆப் பார்ம் ஆனார். அதன்பின் படங்களில் பெரிதாக தோன்றவில்லை. இந்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3-யில் என்ட்ரி கொடுத்தார். அது அவருக்கு நல்ல கம்பேக்காக இருந்தது. பிக்பாஸ் வீட்டை வெளியேறிய பின் உடல் எடையை குறைத்து செம பிட்டாக மாறிவிட்டார். தற்போது ஓரிரு படங்களில் நடிக்கிறார். இன்ஸ்டாவில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஷெரின் தற்போது பச்சை நிற உடையில் அழகு திமிறும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் வாவ் சொல்லி வருகின்றனர்.