திருமணத்திற்கு வற்புறுத்தி பெண்ணை மிரட்டிய நடிகர்
ADDED : 1303 days ago
விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வாராகி, 46; திருமணமானவர். பத்திரிகை நிருபரான இவர், 'சிவா மனசுல புஷ்பா' என்ற திரைப்படத்தை தயாரித்து, நடித்துள்ளார். இவர் வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில், கணவரை இழந்த 31 வயது பெண் வசிக்கிறார். இந்த நிலையில், அப்பெண்ணின் வீடு புகுந்து, தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.
மொபைல் போனிலும் அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். இதற்கு அப்பெண் மறுத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்த வாராகி, அப்பெண்ணை அசிங்கமாக திட்டியதுடன், அவரது மடிக்கணினியை அடித்து உடைத்து மிரட்டல் விடுத்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் வடபழநி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, வாராகியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.