குணமடைந்து வீடு திரும்பினார் தர்மேந்திரா
ADDED : 1268 days ago
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா. அமிதாப்பச்சன் காலத்தில் அவரது எதிர்களத்தில் நின்ற நடிகர். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு கரன் ஜோகர் இயக்கும் 'ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் முதுகு தசை பிடிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது வீடு திரும்பி உள்ளார். இதுகுறித்து தர்மேந்திரா வெளியட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: எனது உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், இனி உடல்நலம் சார்ந்த விஷயங்களில் மிக கவனமாக இருப்பேன். என்று கூறியுள்ளார்.