சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட்பிரபு
ADDED : 1335 days ago
மாநாடு, மன்மதலீலை படங்களைத் தொடர்ந்து நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. தமிழ், தெலுங்கில் தயாராகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது டான், அயலான் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் தமிழ் தெலுங்கில் தயாராகும் நிலையில் அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கும் படமும் தமிழ் தெலுங்கில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.