உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இரவின் நிழல்' டீசருக்கு வரவேற்பு

'இரவின் நிழல்' டீசருக்கு வரவேற்பு

பார்த்திபன் இயக்கி, அவர் ஒருவர் மட்டுமே நடித்த வித்தியாசமான படம் 'ஒத்த செருப்பு'. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம் தேசிய விருதையும் வென்றது. இந்த படத்திற்கு பிறகு பார்த்திபன், 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். புதுமுயற்சியாக இந்த படத்தை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளார் பார்த்திபன். இதற்காக முறையான ஒத்திகை நடத்தி, ஏகப்பட்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளார். உலகின் முதல் நான் லீனியர் படம் என்ற பெருமையோடு இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பசியும், பணம் சார்ந்த பிரச்னையும் தான் என் வாழ்க்கை பிரச்னை என பார்த்திபன் வசனம் பேசி உள்ளார். ஆகவே கதைக்களமும் அதுவாகத்தான் இருக்க முடியும் என யூகிக்க முடிகிறது. 24 மணிநேரத்திற்குள்ளாகவே இந்த படத்தின் டீசர் 10 லட்சம் பார்வைகளை தாண்டி வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !