கண்களை தானம் செய்த வர்ஷா பொல்லம்மா
ADDED : 1283 days ago
தமிழ் படங்களான '96,' 'செல்பி' உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. பெங்களூரை சேர்ந்த நடிகையான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது வர்ஷா பொல்லம்மா தனது கண்களை தானம் செய்து இருக்கிறார். இந்த செயலுக்காக ரசிகர்களும் , பிரபலங்களும் வர்ஷா பொல்லம்மாவை பாராட்டி வருகின்றனர் .