உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் 66 பொங்கல் ரிலீஸ் : அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய் 66 பொங்கல் ரிலீஸ் : அதிகாரபூர்வ அறிவிப்பு

பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 66வது படம் தெலுங்கு, தமிழில் தயாராகிறது. இதனை வம்சி இயக்குகிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார். ஷாம், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார். இது பேமிலி செண்டிமென்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தற்போது படத்தின் வெளியீடு குறித்து படத்தை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவருவதாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !