மல்லிப்பூவும்... லைலாவும்...
ADDED : 1247 days ago
தமிழில் கள்ளழகர், பிதாமகன், முதல்வன், தில் உள்பட பல படங்களில் நடித்தவர் லைலா. கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு வெளியேறிய அவர், தற்போது மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டு பெண் ஒருவர் தனக்கு மல்லிகப்பூ கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் லைலா. அதோடு தமிழக மக்கள் மிகவும் அன்பானவர்கள். தமிழ் குடும்பங்கள் என் மீது அன்பு செலுத்துபவர்கள். எனக்கு மல்லிகைப்பூ கொடுத்த அந்த பெண்ணுக்கு நன்றி என ஒரு பதிவு போட்டிருக்கிறார் லைலா. அந்த புகைப்படம் வைரல் ஆனது.