கமல் படத்தில் இணைந்த சாய் பல்லவி
ADDED : 1294 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தை தயாரித்து நடித்திருக்கிறார் கமல்ஹாசன். அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் 21வது படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வந்தது. அதன்படி இந்த படத்தின் நாயகியாக சாய் பல்லவி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை சாய்பல்லவியின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ராஜ்கமலின் 51வது பட தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.