முதல் பெண் இயக்குனரின் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
ADDED : 1242 days ago
தமிழில் பொன்னியின் செல்வன், அயலான், இரவின் நிழல், வெந்து தணிந்தது காடு, மாமனிதன் என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இதுதவிர சில ஹிந்திப் படங்களுக்கும் இசையமைக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் நடந்த எக்ஸ்போ 20 நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குனர் நயிலா அல் காஜா இயக்கும் பாப் என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ரஹ்மான் வெளியிட் வெளியிட்ட செய்தியில், ‛‛நயிலா ஒரு சிறந்த இயக்குனர். அவர் இயக்கிய படங்களில் சில காட்சிகளை பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுள்ளேன். அதன் காரணமாகவே அவரது பாப் படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.