டான்-க்கு பேரதிர்ச்சி : லீக்கான முழு படம்
ADDED : 1324 days ago
அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , பிரியங்கா மோகன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் டான். ரசிகர்கள் படத்தை தியேட்டர்களில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், சினிமா படங்களை பதிவிறக்கம் செய்ய சில பைரசி இணையதளங்கள் உள்ளன . படம் ரிலீசாகி ஒருநாள் முடிவதற்குள் முழு படமும் அந்த தளங்களில் வெளியாகி விட்டது. படம் ஆன் லைனில் கசிந்ததால் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒட்டுமொத்த டான் படக்குழுவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் படத்தை ஆன்லைனில் பார்க்காமல் தியேட்டரில் பார்க்குமாறு சமூக ஊடகங்களில் வற்புறுத்தி வருகின்றனர்.