கர்ப்பமாக இருக்கும் நமீதா கணவருடன் நடத்திய போட்டோஷூட்
ADDED : 1246 days ago
விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நமீதா. இவர் குஜராத் நடிகையாக இருந்தபோதும் தமிழகத்திலேயே செட்டிலாகிவிட்டார். 2017ம் ஆண்டு தொழிலதிபர் வீரேந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது கர்ப்பமாக இருக்கிறார் நமீதா. இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்த நாளின் போது தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார் நமீதா. இந்நிலையில் தற்போது தனது கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.