விமான நிலையத்தில் பூஜா ஹெக்டேவிற்கு இன்ப அதிர்ச்சி
ADDED : 1235 days ago
தமிழில் முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் தமிழில் நடித்த இரண்டு படங்களுமே வரவேற்பை பெறவில்லை. அதனால் தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பூஜா ஹெக்டே பங்கேற்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டபோது, அங்கு பூஜாவின் ரசிகர்-ரசிகைகள் கையில் பேனர் ஏந்தியபடி அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த பூஜா ஹெக்டே, தன்னை வாழ்த்திய ரசிகர்களை அருகில் சென்று சந்தித்து விட்டு அதன்பிறகு விமான நிலையத்திற்குள் சென்றார். இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலானது.