ஜூனியர் என்டிஆர் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ADDED : 1235 days ago
தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிருத், விஜய்யின் மாஸ்டர், பீஸ்ட் படங்களில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததை அடுத்து அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டார். அதோடு தெலுங்கிலும் இவர் ஏற்கனவே பவன் கல்யாண், நானி நடித்த படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதோடு ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் நட்பு குறித்து ஒரு பாடலை தமிழில் பாடியிருந்தார் அனிருத். இந்நிலையில் தற்போது ஜூனியர் என்டிஆரின் 30வது படத்துக்கு இசை அமைக்கிறார் அனிருத். சிரஞ்சீவி - ராம்சரண் நடித்த ஆச்சார்யா படத்தை தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார் கொரட்டல்ல சிவா. இப்படம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது அந்த தகவலில் அனிருத் இசையமைப்பாளராகவும், ரத்தினவேலு ஒளிப்பதிவாளராகவும் இடம் பெற்றுள்ளார்கள்.