உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல்ஹாசன் மாதிரி நடிக்க எந்த நடிகருக்கும் தைரியம் இல்லை : நடிகர் வெங்கடேஷ்

கமல்ஹாசன் மாதிரி நடிக்க எந்த நடிகருக்கும் தைரியம் இல்லை : நடிகர் வெங்கடேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது. விஜய் சேதுபதி, பஹத் பாசில் இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து நடித்துள்ளனர். விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நரேன், காயத்ரி, ஸ்வஸ்திகா கிருஷ்ணன் சேம்பன் வினோத் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தெலுங்கில் படத்தின் பிரஸ் மீட் நிகழ்வு நடைபெற்றது. விக்ரம் படத்தை நடிகர் நிதின் குடும்பத்தினர் தெலுங்கில் வெளியிடுகின்றனர். விழாவில் நிதின், வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய வெங்கடேஷ் “ஒவ்வொரு நடிகருக்கும் மரோ சரித்ரா ஒரு ஜி.பி.எஸ். தசாவதாரம் போன்ற படம் பண்ணும் தைரியம் வேண்டும். ஆனால் இப்போது எந்த நடிகருக்கும் இல்லை. கமல் சார் ஒரு சிறந்த நடிகர். ஏக் துஜே கே லியே மூலம் அவர் முதல் பான் இந்தியா ஸ்டார் ஆனார். இன்று, அவர் தனது ஒப்பற்ற திறமையால் உலகளாவிய நட்சத்திரமாக இருக்கிறார். கமல் சார் ஒரு அதிசயம். அவருக்கு இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !