தற்கொலைக்கு முயன்ற தெலுங்கு நடிகை
ADDED : 1223 days ago
தெலுங்கு சின்னத்திரையுலகின் முன்னணி நடிகை கட்டா மைதிலி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் தான் கொடுத்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதை கண்டித்து நான் தற்கொலை செய்ய போகிறேன், என்று போலீசாருக்கே போன் செய்து கூறிவிட்டு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், போன் சிக்னலை வைத்து அவருடைய வீட்டைக் கண்டுபிடித்தனர். அங்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.