விக்ரம் படத்தை பார்த்து கண் கலங்கிய அனிருத்
ADDED : 1270 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் புரமோஷன் பல ஊர்களிலும் நடைபெற்று வருகிறது. நேற்று விக்ரம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அப்போது மேடையில் பேசிய அனிருத், கமலின் விக்ரம் படம் எங்களுக்கு ஸ்பெஷலான படம். இப்போது அப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து விட்டோம். நான் எப்போதுமே எமோசனல் ஆக மாட்டேன். ஆனால் விக்ரம் படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு படம் பார்த்தபோது லோகேஷ் கனகராஜிடம் கண்கலங்கி விட்டேன். அந்தளவுக்கு கமல் சாரின் நடிப்பு பிரமிக்க வைத்தது. இப்படி ஒரு படத்தில் பணியாற்றியதை ரொம்ப பெருமையாக நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார் அனிருத்.