வன மனிதனாக மாறிய ஜெகபதிபாபு
ADDED : 1273 days ago
90களில் தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக நடித்து வந்த ஜெகபதிபாபு தற்போது அவரது இரண்டாவது இன்னிங்ஸில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் கதையின் நாயகனாக நடிக்க, தெலுங்கில் சிம்பா என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சம்பத் நந்தி இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மண்ணை, இயற்கையை நேசிக்கும் சிம்பா என்கிற வன மனிதன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெகபதிபாபு. நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் என்பதால் படத்தில் ஜெகபதிபாபுவின் கதாபாத்திர போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர்.