ஹரிஷ் கல்யாண் - அதுல்யா ரவி நடிக்கும் புதிய படம்
ADDED : 1223 days ago
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ஹரிஷ் கல்யாண் .தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு போன்ற ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான கசடதபற, ஓ மண பெண்ணே போன்ற படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.