தாய்லாந்தில் தேனிலவை கொண்டாடும் நயன்தாரா
ADDED : 1211 days ago
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் கடந்த 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த ஜோடிகள் கேரளா சென்று பெற்றோரிடம் ஆசி பெற்றனர். தற்போது அவர்கள் தாய்லாந்தில் தேனிலவை கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பான படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடி வரும் நயன் - விக்கி ஜோடி அங்கிருந்தபடி சில ரொமான்ட்டிக் போட்டோக்களை பகிர்ந்துள்ளனர்.
ஒரு வாரம் வரை அவர்கள் தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடுவார்கள் என்று தெரிகிறது. அதன்பிறகு அவரவர் பணியாற்றும் படங்களில் பிசியாகி விடுவார்கள்.