ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை
தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் 'பெத்தி'. இயக்குனர் புச்சி பாபு சனா, இந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். முக்கிய நேரத்தில் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடித்து வருகிறார். கிராமத்து கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் ஒரு மிகப்பெரிய ஆக்சன் காட்சி ஒன்று சமீப நாட்களாக ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த சண்டைக் காட்சியை படமாக்குவதற்காக பாலிவுட்டின் மிகப்பெரிய சண்டை பயிற்சி இயக்குனரும் இளம் ஹீரோ விக்கி கவுசலின் தந்தையுமான ஷாம் கவுசல் தான் இந்த சண்டைக் காட்சியை வடிவமைத்து தனது மேற்பார்வையில் இயக்கி வருகிறார். இவர் ஹிந்தியில் 'பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி' உள்ளிட்ட பல ஆக்சன் படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர். பெத்தி படத்தின் இந்த குறிப்பிட்ட சண்டைக் காட்சி மிகப்பெரிய அளவில் செலவு செய்யப்பட்டு படமாக்கப்பட்டு வருகின்றது.