மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை
கேரளாவில் கொச்சியில் சமீபத்தில் 'ஹார்ட்டஸ் 2025' என்கிற பெயரில் கலாச்சார விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், மஞ்சு வாரியர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் கமல்ஹாசன் அரசியல் குறித்தும் பேசினார்.
அங்கிருந்த மஞ்சு வாரியர் பேசும்போது, “என்னை அரசியலில் சேரச்சொல்லி பல இடங்களில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அரசியலில் சேரும் அளவிற்கு எனக்கு போதிய அறிவு இல்லை. அரசியலில் சேர வேண்டும் என்றால் ஒருவருக்கு நிச்சயம் நல்ல அறிவு இருக்க வேண்டும்” என்று கூற, அருகில் இருந்த கமல், “அப்படியா நினைக்கிறீர்கள்?” என்று கேட்டு சிரித்தார்.
தொடர்ந்து கமல்ஹாசன் அவரிடம் கூறும்போது, “உங்களுடைய அரசியல் நம்பிக்கைகளை நீங்கள் பர்சனல் ஆக வைத்துக் கொள்வதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் நீங்கள் கட்டாயம் ஓட்டுச்சாவடிக்கு வர வேண்டும். இது ஒன்று தான் என்னுடைய கோரிக்கை. நீங்கள் அரசியலுக்கு வரக்கூடிய நேரமும் அதுதான். ஓட்டுச்சாவடி ரொம்பவே அழுக்கடைந்த இடமாக இருந்தாலும் கூட நீங்கள் கட்டாயம் வர வேண்டும்” என்று கூறினார்.