வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், விஜய் சேர்ந்து நடிப்பார்கள்: கங்கை அமரன் தகவல்
ADDED : 1286 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித்குமார். இவர்களுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். 1995ம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க சிறப்பு தோற்றத்தில் அஜித் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து திரைப்படம் நடித்தது இல்லை. இவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள், திரையுலகினர் உட்பட பலர் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள் .
இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், விஜய் சேர்ந்து நடிக்கும் பான் இந்தியா படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.