நீண்ட இடைவெளிக்கு பின் ஹீரோவாக களம் காணும் ராகவ்!
ADDED : 1199 days ago
சினிமா மற்றும் சின்னத்திரையில் 90களில் அதிகம் பிரபலமானவர் ராகவ். இவரும் இவரது மனைவி ப்ரீத்தாவும் சிறந்த நடன கலைஞர்கள் என்பது பலரும் அறிந்ததே. ப்ரீத்தாவும் சில சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். இடையில் சிறிதுகாலமாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருவரும் எந்த ப்ராஜெக்டிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'செவ்வந்தி' என்ற தொடரில் ராகவ் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக 'மகராசி' தொடரில் ஹீரோயினாக நடித்திருந்த திவ்யா ஸ்ரீதர் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நீபா, ப்ரியங்கா, சிவான்யா, ஜெய்ராம், வினோத் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த தொடருக்கான படப்பிடிப்பு கொடிவேரி அணை பகுதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.