இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன்
ADDED : 1215 days ago
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'சலார்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை 'கே ஜி எப்' பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். மேலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் அவரின் 154வது படத்திலும், கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் கவலை வேண்டாம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.