வாழ்க்கை என்பது ஒரு கனவு : ஏ.ஆர்.ரஹ்மான் சொல்கிறார்
ADDED : 1200 days ago
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மூத்த மகள் கதீஜாவுக்கு அண்மையில் திருமணம் செய்து வைத்தார். நல்ல முறையில் திருமணம் நடந்ததற்காவும், தனது உலக இசை சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடப்பதற்காகவும் வேண்டுதல் செய்ய அவருக்கு பிடித்தமான அஜ்மீர் தர்காவுக்கு தனது மனைவி சாய்ராபானுவுடன் சென்றார்.
அஜ்மீர் தர்காவில் மனைவி சாய்ரா பானு ஷாப்பிங் செய்வதையும், அஜ்மீர் தலைப்பாகையுடன் தான் இருப்பதையும் படமாக வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில் : இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே நிழலாகும். கருணை கடலே உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே. என்று பதிவிட்டுள்ளார்.