மாயோன் இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சிபிராஜ்
ADDED : 1245 days ago
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெரடி, கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் வெளியான படம் மாயோன். பேண்டசி த்ரில்லர் படமாக உருவாகி இருந்த படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கசங்கிலி பரிசளித்தார். இந்த படம் வருகிற 7ம் தேதியன்று தெலுங்கில் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கு இடையில் மாயோன் 2ம் பாகத்தையும் அறிவித்திருக்கிறார்கள். அடுத்தாண்டு தீபாவளிக்கு மாயோன் 2 வெளியாகிறது.