பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா
ADDED : 1271 days ago
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா , பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் . 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் தாய் கிழவி எனும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷே பாடல் வரிகள் எழுதி பாடியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு சென்னை நேரு ஸ்டேடியத்தில் தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி நடக்க இருக்கிறது . இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் .