ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு
ADDED : 1211 days ago
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப் குமார். இவர் அடுத்தபடியாக ரஜினியின் 169 வது படமான ஜெயிலர் படத்தை இயக்கப் போகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் என பலர் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் யோகி பாபுவும் இணைந்திருக்கிறார். ஏற்கனவே நெல்சன் இயக்கிய மூன்று படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்த யோகி பாபு, இதற்கு முன்பு ரஜினி நடித்த தர்பார் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஜெயிலர் படத்திலும் இணையப்போகிறார்.