சாய் பல்லவியின் கார்கி பட டிரைலர் வெளியானது
சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்துள்ள படம் கார்கி. இந்த படத்தில் அவருடன் ஐஸ்வர்யா லட்சுமி, காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளார்கள். கவுதம் ராமச்சந்திரன் இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற 15ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. குடும்ப பின்னணி கொண்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாய் பல்லவியின் தந்தையை திடீரென்று போலீசார் கைது செய்கிறார்கள். அதையடுத்து தந்தையை மீட்பதற்கு அவர் எப்படியெல்லாம் போராடுகிறார்? என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பது குறித்து கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகளும் வசனங்களும் மனதில் அழுத்தமாக பதியும் வகையில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த டிரைலர் முழுவதுமே சாய் பல்லவி நடித்த காட்சிகளை அதிகமாக இடம்பெற்றுள்ளன.